சினிமா

அது மட்டும் நடந்தால் அணைத்து ஸ்கிரீனிலும் கில்லி படம்தான் ஓடும்! பிரபல திரையரங்கம் அறிவிப்பு!

Summary:

Gilli movie again screening in vetri and rohini theater

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஒடி மாபெரும் வெற்றிபெற்ற படங்களை மீண்டும் திரையரங்கில் ஒளிபரப்பும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகிறது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம் மற்றும் ரோகினி திரையரங்களில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்கள் மீண்டும் ஒளிபரப்பபடுகிறது. வெற்றி திரையரங்கில் கடந்த வாரம் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தை மீண்டும் திரையிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த வெற்றி திரையரங்கின் உரிமையாளர், கில்லி படம் இதுவரை டிஜிட்டலில் மாற்றப்படவில்லை என்றும் அதனால் தற்போது கில்லி படத்தை திரையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

https://cdn.tamilspark.com/media/174224lx-Ghilli-990x557.jpg

மேலும் கில்லி படத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகவும், குஷி படமும் அதனோடு சேர்ந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். இந்நிலையில் ரோகினி திரையரங்கின் சார்பில் வெளியான தகவலில் கில்லி படம் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டால் ரோகினி திரையரங்கில் உள்ள அணைத்து திரையிலும் கில்லி படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement