சினிமா

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பொண்ணு இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?

Summary:

Gilli movie actress nancy jennifer acting as heroine

இன்றைய தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய். தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் விஜய். இந்த பேரும், புகழும் ஒரே நாளிலோ, அல்லது ஒரே படத்திலோ வந்தது இல்லை. பல்வேறு வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என அனைத்தையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் விஜய்.

விஜய்யின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கில்லி. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்று வரை பிரபலம்.

நடிப்பு, நடனம், நகைச்சுவை என தனது திறைமைகளை பல விதங்களில் நடிகர் விஜய் இந்த படத்தில் காட்டியிருப்பார். இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்ஸி ஜெனிபர் என்ற பெண்ணிற்கு தனி பங்கு உண்டு. விஜய்யுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்பு, நகைச்சுவை இவை அனைத்தும் படம் பார்க்கும் அனைவரையும் மிகவும் ஈர்க்கும்.

கில்லி படத்தில் சின்ன பெண்ணாக இருந்த நான்ஸி தற்போது நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளந்துவிட்டார். கில்லி படத்திற்கு பிறகு ஜெனிபர், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். படங்களிலும் சிறிய பாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


Advertisement