மீண்டும் ஒரு குட் நியூஸ் சொன்ன காயத்ரி... குவியும் வாழ்த்துக்கள்... அப்படி என்ன நியூஸ் தெரியுமா.?Gayathri announced one good news in social media

தமிழ் சினிமா நடிகர்களை தாண்டி தற்போது சின்ன திரை பிரபலங்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சின்ன திரையில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க துவங்கி தென்றல், சரவணன் மீனாட்சி, தாமரை, அழகி மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார் காயத்ரி.

மேலும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடன இயக்குனர் யுவராஜ் என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 12 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் காயத்ரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

Serial actress Gayathri

குழந்தை பிறந்த கையுடன் காயத்ரி - யுவராஜ் தம்பதியினர் சொந்தமாக வீடு வாங்கி அசத்தினார்கள். தற்போது மீண்டும் ஒரு குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை துவங்கியுள்ளனர். இந்த ஸ்டுடியோவின் துவக்க விழா வெகு விமரிசையாக நடந்துள்ளது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இச்செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகவே ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.