இனிமே இப்படித்தான்...அட! நடிகர் கௌதம் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா? வாழ்த்தும் ரசிகர்கள்!

இனிமே இப்படித்தான்...அட! நடிகர் கௌதம் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா? வாழ்த்தும் ரசிகர்கள்!


gawtham-karthik-like-to-act-in-action-movie

தமிழ் சினிமாவில் கடல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். அதனைத்தொடர்ந்து அவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, சந்திரமவுலி, தேவராட்டம் என  பல படங்களில் நடித்துள்ளார். இந்த  படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெற்றுவரவில்லை.

இந்தநிலையில் கௌதம் கார்த்திக் தற்போது பாணா காத்தாடி, செம போத ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஏற்கனவே ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவான பிளான் பண்ணி பண்ணனும் என்ற  காமெடி படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகாமல் உள்ளது.

Gawtham karthik

இந்த நிலையிலேயே அவர் கௌதம் கார்த்திக்கை வைத்து ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை  எல்.சிந்தன், ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து கௌதம் கார்த்திக் கூறுகையில், இனிவரும் காலங்களில் ஆக்ஷன் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்த  இருக்கிறேன். மேலும் அதிரடி ஹீரோவாக வலம் வரவும் ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.