அனல்பறக்கும் வைப்.. சூரியின் கருடன் பட 'ஒத்தப்பட வெறியாட்டம்' பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!



Garudan Movie Othapada Veriyattam Song Out Now 

 

வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன் (Karudan). இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். 

ஒத்தப்பட வெறியாட்டம் பாடல்

மே மாதம் 31ம் தேதி திரையரங்கில் வெளியாக திட்டமிட்டுள்ள நிலையில், படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று படத்தின் ஒத்தப்பட வெறியாட்டம் பாடல் வெளியாகுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது பாடல் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.! 

கையில் அரிவாளுடன், முகத்தில் ரத்தம் தெறிக்க வெளியாகியுள்ள பாடல் போஸ்டருடன் பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில், சாம், வேலு, அரவிந்த், செண்பகராஜ் ஆகியோரின் பின்னணி குரலில் பாடல் வெளியாகியுள்ள பாடல் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.!