" நான் கஷ்டப்படும் போது விஜயகாந்த் என்கிட்ட இந்த மாதிரி நடந்துப்பாருன்னு எதிர்பார்க்கல " கங்கை அமரனின் வைரல் பேட்டி.?Gangai amaran recent interview

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் பாடலாசிரியர், இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர் என்று பல்துறை வித்தகராக இருக்கிறார்.

cinema

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பாடல் எழுதுவதில் தான் எனக்கு ஆர்வம். மலேசியா வாசுதேவன் தான் என்னை இசையமைப்பாளராக்கினார். பிறகு, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம், இளையராஜா இருவரும் கோழி கூவுது படத்தை இயக்க வாய்ப்பு தந்தார்கள்.

நாங்கள் சென்னைக்கு வந்த புதிதில் சங்கிலி முருகன் தான் எங்களை நாடகக்குழுவில் சேர்த்துவிட்டார். அப்போது தான் நல்ல சாப்பாடே நாங்கள் சாப்பிட்டோம். அப்போதே எங்களுக்கு கவுண்டமணியைத் தெரியும். எப்போதும் அவர் பண விஷயத்தில் கறாராக இருப்பார்.

cinema

ராஜாதி ராஜா, கோயில் காளை என்ற இரு படங்கள் ஒரே நேரத்தில் செய்தேன். அப்போது எனக்கு நிறைய செலவு, மனக்குழப்பம். ஆனால் அப்போதும் பணம் தந்தால் தான் டப்பிங் வருவேன் என்று கவுண்டமணி சொல்லிவிட்டார். ஆனால், அப்போது விஜயகாந்த் தான் சம்பளம் கூட பேசாமல் என் கஷ்டங்களை உணர்ந்து உறுதுணையாக இருந்தார்.