சினிமா

காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு நிலைமையா! விட்ட இடத்தை பிடிக்க காஜல் புதிய திட்டம்

Summary:

Gajal agarwal glamour photos

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். 

இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதன் பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் பிடித்தார்.

33 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு சமீபகாலமாக மிகப்பெரிய பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அவர் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு திரைத்துறையினரை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

 


Advertisement