சினிமா பிக்பாஸ்

ஒத்தகேள்வியால், வசமாக சிக்கி வாயடைத்துப்போன மதுமிதா.!வைரலாகும் ஷாக் வீடியோ!!

Summary:

frooti caller asking question for mathumitha

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக  பிக்பாசால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும். 

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியார்களுள் ஒருவரான மதுமிதா தமிழ் பெண் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். மேலும் யார் தவறு செய்தாலும் அதனை சுட்டிக்காட்டியும் வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நேயர் ஒருவர்  போன்காலில் மதுமிதாவிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் இதுவரை எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் போல்டாக பேசுனீர்கள். இப்போ நீங்க நடிக்கிற மாறி இருக்கீங்களே அது ஏன்? என கேட்டுள்ளார்.. இதற்கு மதுமிதா என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துபோயுள்ளார்.


Advertisement