BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
யோகிபாபு படப்பிடிப்பு தளத்தில் அடிதடி! அதுவும் யார்யாருக்குனு பார்த்தீங்களா! அதிர்ச்சி சம்பவம்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் யோகிபாபு. அவரது காமெடி மற்றும் டைமிங் டயலாக்கிற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஹீரோவாக அவதாரமெடுத்த யோகிபாபு கோலமாவு கோகிலா, தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் யோகி பாபு கைவசம் தற்போது அஜித்துடன் வலிமை, விஜய்யுடன் பீஸ்ட், விஷாலுடன் வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன. மேலும் அவர் ஹீரோவாக பொம்மை நாயகி மற்றும் மலையோரம் வீசும் காற்று போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையோரம் வீசும் காற்று படப்பிடிப்பு தேனி அருகே குரங்கணி கொட்டகுடி பகுதியில் நடைபெற்று வந்துள்ளது. அதில் யோகிபாபு கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு அவரது உதவியாளர் சதாம் உசேன் மற்றும் கார் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
முதலில் ஆவேசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்ட இருவரும் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் சதாம்உசேன் மூக்கில் ரத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.