தனுஷால் அந்த ஹிட் படத்தில் நடிக்காமல் போன வடிவேலு.. தனுஷும் வடிவேலும் மோதலா.?

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். இவர் தமிழில் முதன் முதலாக 'திருடா திருடி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மாரி, அசுரன் போன்ற ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், நடிகர் தனுஷிற்கும், வடிவேலுவிற்கும் பனிப்போர் இருக்கிறது என்று திரைத்துறையினர் கிசுகிசுத்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், 'படிக்காதவன்' திரைப்படத்தில் விவேக்கிற்கு பதிலாக முதலில் வடிவேலுவை தான் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் தனுஷ் நடிப்பதால் வடிவேலு இதனை மறுத்துவிட்டாராம். இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.