தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிகொன்ற தந்தை.! வெளியான பகிர் காரணம்!!

Summary:

Father killed son for drinking liquor

தேனி மாவட்டம் பூதிப்புரம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். அவரது மகன் மலைச்சாமி. அவர் பெரம்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் ஜோதி என்ற பெண்ணிற்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

 கணவரை மிகவும் பெரிதாக எண்ணி அவருடன் வாழ வேண்டும் என ஜோதி ஆசையாக வந்த நிலையில்,  திருமணமான சில நாட்களிலேயே  கணவர் குடிபோதைக்கு அடிமையானவர் என தெரிந்து கொண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். 

இந்நிலையில் ஜோதி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதனால் தங்கராஜ் தனது மகனை குடியை விடுமாறு கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மலைச்சாமி தந்தை தங்கராஜிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் கடுமையாக கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் தங்கராஜ் அரிவாளால் மலைச்சாமி சராமரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது மகனையே வெட்டிக்கொன்ற தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


Advertisement