
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிர
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடரில் திருமணமான ஹீரோ பாரதியை காதலித்து, அடையத் துடிக்கும் பெண்ணாக, பயங்கர வில்லியாக, வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா ஆசாத்.
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சில சீரியல்களில் நடித்த இவரை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்து, பெயரை வாங்கித் தந்தது பாரதிகண்ணம்மா தொடர்தான். நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
அவர் தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள், குழந்தை பிறந்துவிட்டால் நீங்கள் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க மாட்டீர்களா? அடுத்த வெண்பா யார்? என கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்து ஃபரீனா வெளியிட்ட வீடியோவில்,
எனக்கு நடிப்பதற்கு ஒரு சிரமமும் இல்லை. முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement