வேற லெவல்!! வெளியான புதிய மாஸான பிகில் அப்டேட்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

வேற லெவல்!! வெளியான புதிய மாஸான பிகில் அப்டேட்.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!



fans-happy-with-pigil-movie-new-update

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vijay

இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் படத்தின் ட்ரைலர், ரிலீஸ் தேதி போன்ற அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் ரசிகர்களுக்கு படத்தினை குறித்த விவரங்களை பதிவு செய்து கொண்டே வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போதும் படம் குறித்த புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தளபதி ரசிகர்களுக்காக புதிய தகவல் இன்று 6 மணிக்கு வரவுள்ளது.இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை.நாம் அனைவரும் எதற்காக காத்திருந்தோமோ அதுவே. நமக்கு மிகவும் உற்சாகத்தை தரக்கூடியது.யோசித்து கொண்டே காத்திருங்கள் என பதிவிட்டுள்ளார்.



 

ரசிகர்கள் என்ன தகவலாக இருக்குமோ என மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.