சினிமா

நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா! கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்!

Summary:

Fans comdemned for Bollywood actor tease rajinikanth

ஹிந்தி தொலைக்காட்சியில் தேஸ் மெய்ன் நிகிலா ஹோகா சந்த், ஸ்வபிமான் போன்ற சீரியல்களில்  நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ரோஹித் ராய். இவர்  காபில், அபார்ட்மெண்ட், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா போன்றபல  படங்களிலும் சிறுகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என கிண்டலாக ஒரு படத்தை வெளியிட்டார். மேலும் அதில் கொரோனோவை கட்டுப்படுத்துவோம். பணிக்கு திரும்பும்போது கவனமாக இருங்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். நாம் அனுமதிக்காத வரை இந்த வைரஸால் நம்மை நெருங்க முடியாது எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் பலரும் ஆவேசம் அடைந்தனர். மேலும் சிலர் நடிகர் ரோஹித் ராய்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் நடிகர் ரோஹித் ராய் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில் அமைதியாக இருங்கள். இதனை நகைச்சுவைக்காகத்தான் வெளியிட்டேன். உங்களைச் சிரிக்கவைக்கவே அப்படிச் செய்தேன். முதலில் அதை நான் எதற்காகப் பகிர்ந்தேன் என்று பாருங்கள். தயவுசெய்து காமெடியை காமெடியாக எடுத்துக் கொள்ளுங்கள். ரஜினி குறித்து பாலிவுட்டில் பல காமெடிகள் பிரபலம் என்று கூறியுள்ளார்.


Advertisement