சினிமா

அட.. வெறும் ரெண்டே படம்தான்!! குஷ்புவை தொடர்ந்து, சிம்பு பட நடிகைக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்! யார்னு பார்த்தீர்களா!!

Summary:

சினிமாவுலகில் மாஸ் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருப்பதைப் போன்று நடிகைகளுக்கும்

சினிமாவுலகில் மாஸ் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருப்பதைப் போன்று நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் அவர்களுக்கு ரசிகர்கள் ஆள் உயர கட் அவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம் செய்வது, கோவில் கட்டுவது என கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்ததை தொடர்ந்து நடிகை குஷ்புவிற்கு அவரது ரசிகர்கள்  கோவில் கட்டி சிலை வைத்தனர். அதனை போல தற்போது சிம்பு பட நடிகைக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். டான்ஸரும் சிறந்த மாடலுமான அவர் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை. பின்னர் தமிழில் களமிறங்கிய அவர் சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு  காதலர் தின பரிசாக அவரது ரசிகர்கள் சென்னையில் கோயில் கட்டி, மார்பளவு சிலை வைத்து அதற்கு அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்து கும்பிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement