சிவகார்த்திகேயனின் கருத்தால் கடுப்பான ரசிகர்கள்.? இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ.!?Fans angry about siva karthikeyan comment about animal movie

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து தொகுப்பாளராக பணிபுரிந்து, பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார். முதன் முதலில் தமிழில் மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படத்திற்குப் பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Siva

தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதில் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசி இருந்ததார். இதனால் இவரது ரசிகர்கள் பலருக்கும் படத்தைக் குறித்து ஏமாற்றமளிக்கும் விதமாகவே இருந்தது.

Siva

மேலும் தற்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு விருந்தினராக சென்ற சிவகார்த்திகேயன் அனிமல் படத்தை குறித்து பாராட்டி பேசி இருந்தார். அனிமல் படத்தில் பெண்களை அவமானப்படுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் பல காட்சிகள்  இருந்ததால் பல திரை பிரபலங்கள் அனிமல் படத்தை குறித்து மோசமான விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில், சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.