இந்தியா சினிமா

வீடியோ:ஷாருக்கானை காண முடியாததால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகர்! பாலிவுட்டில் பரபரப்பு!

Summary:

Fan cut his throat because of unable to meet sharukhan

இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுபவர் நடிகர் ஷாருகான். உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஸ்டார் பட்டியலில் ஷாருக்கானுக்கு ஒருவர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு நேற்று (நவ.3) பிறந்தநாள் என்பதால், அவரை காண பல்வேறு இடங்களில் இருந்து வந்த ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் காத்திருந்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த சலீம் (வயது 35) என்பவர் ஷாருக்கானை காண நேற்று மும்பை வந்திருந்தார். ஆனால், அவரால் ஷாருக்கானைப் பார்க்க முடியால் போனது. இதனால் மனமுடைந்த சலீம் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார்.

இதனையடுத்து, காவல்துறையினர் அவரைமீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஷாருக்கானை பார்க்க முடியாததால் ரசிகர் ஒருவர் செய்த இந்த விபரீத காரியம் திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement