அடேங்கப்பா.. இப்படியொரு தீவிர ரசிகரா!! தன் வீட்டிலேயே சமந்தாவிற்காக அவர் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா.!

அடேங்கப்பா.. இப்படியொரு தீவிர ரசிகரா!! தன் வீட்டிலேயே சமந்தாவிற்காக அவர் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா.!


fan-build-temple-for-samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரிந்து விட்டனர்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் என்ற அரிதான தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அண்மையில் சமந்தா நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

samantha
இந்த நிலையில் பாபட்லா பகுதியில் வசிக்கும் சமந்தாவின் தீவிர ரசிகரான சந்தீப்  என்பவர் சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கபட்டிருப்பது தெரிந்து
அவர் குணமடைய பல கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகள் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் குணமடைந்தால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமந்தா ஓரளவு நோயிலிருந்து குணமடைந்த நிலையில் சந்தீப் தன் வீட்டின் ஒரு பகுதியில் சமந்தாவுக்குக் கோவில் கட்டியுள்ளார். நாளை சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த கோவிலைத் திறக்கவுள்ளதாக அந்த வாலிபர் கூறியுள்ளார்.