சினிமா

பிரபல நடிகைக்கு ஒரு மணி நேரத்திற்கு 2 லட்சமாம்! முகநூலில் அழைப்பு!

Summary:

Fan asked rate for one night to actress gayathri arun

டிவி, சினிமா இவற்றில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் டிவிட்டர், முகநூல் என அனைத்திலும் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் அவர்களுக்கு ஆபாச வார்த்தைகளில் செய்திகளை அனுப்புவது நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் கேரள முன்னணி டிவி நடிகை ஒருவரின் பேஸ் புக் கணக்கில் ஒருவர் ஆபாச அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள டிவி தொடர்களின் முன்னணி நடிகையாக இருப்பவர் காயத்திரி அருண். இவர் ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காயத்ரியின் முகநூல் பக்கத்திற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமா வார்த்தைகளில் செய்தி அனுப்பியுள்ளார். அதில் ஒருநாள் இரவு தங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

இதை பார்த்த காயத்திரி அந்த நபருக்கு பதில் அளித்துள்ளார். அதில், ‘’உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் போது கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்த நபரின் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement