சினிமா

சின்மையிடம் ஆபாச புகைப்படம் கேட்ட வாலிபர், அதற்கு சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பாருங்கள்!

Summary:

Fan asked nude photo from singer chinmaiye and her reaction

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகிகளில் ஒருவர் சின்மயி. இவரது குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சிமிமாவில் பாடுவதையும் தாண்டி, பல்வேறு படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் சின்மயி. இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சின்மயி.

மேலும் MeToo என்ற வார்த்தை மூலம் பெண்களுக்கு எதிராக நெடுக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்ததோடு, பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார் சின்மயி. இதன்மூலம் இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சை கிளம்பியதோடு, தொழில் ரீதியாகவும் முடக்கப்பட்டார் பாடகி சின்மயி.

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் சின்மயிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். "உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்" என அவர் கேட்டுள்ளார். அதற்கு சின்மயி nude மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார். 


Advertisement