அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ப்ப்பா.. செம்ம கியூட்.. திருமண கோலத்தில் புன்னகையரசி சினேகா..! ஆரவாரத்தில் ஆட்பறிக்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழில் வெளிவந்த "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து இவர் அஜித், கமல், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவந்தார்.

கடந்த 2012-ஆண்டு நடிகர் பிரசன்னாவை, சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக பணிபுரிகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் நகைகள் மற்றும் பட்டுப்புடவையுடன் திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.