சினிமா

பிரபல இசையமைப்பாளர் கவலைக்கிடம். மகள் பலி! சோகத்தில் மூழ்கிய திரைத்துறை!.. 

Summary:

famous music director accident

திருவனந்தபுரத்தில் நடந்த சாலை விபத்தில் மலையாள திரையுலகின்  பிரபல பாடகரும் இசைஅமைப்பாளருமான  பாலபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தாரும் சிக்கினார் இந்த விபத்தில் அவரது இரண்டு வயது மகள் பரிதாபகமாக  உயிர்  இழந்தார் .

 தனது 17 வயதிலேயே "மாங்கல்யா பல்லக்கு" என்ற மலையாளப் படத்திற்கு   இசையமைத்தவர் பிரபல வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர். ஏராளமான   திரைப்படங்கள், இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.

பாலபாஸ்கர்  தனது குடும்பத்தாருடன் திருச்சூர் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு  காரில் சென்றுள்ளார் தரிசனம் முடிந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிப்புரம் அருகே வந்த போது, திடீரென கார் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
 
இதையடுத்து பாலபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆகியோரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

 பாலபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரின் நிலையும் மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரபல வயலின் இசைக் கலைஞரான பாலபாஸ்கர் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.


Advertisement