400 படங்கள்,1500 பாடல்கள்! பிரபல திரைப்பட பாடலாசிரியர் உயிரிழப்பு! பேரதிர்ச்சியில் திரையுலகம்!!famous malaiyala lyricist dead by corono

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொடிய கொரோனாவிற்கு சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் உயிரிழக்கும் நிலை நேர்ந்து வருகிறது. இந்த தொடர் உயிரிழப்பால் பலரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது திரைப்பட பாடலாசிரியர் பூவாச்சல் காதர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மலையாள சினிமாவில் 70, 80 ஸ் காலகட்டங்களில் மென்மையான காதல் பாடல்களை எழுதி பெருமளவில் பிரபலமானவர் பூவாச்சல் காதர். இவர் 400-க்கும் அதிகமான படங்களில் 1,500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

lyricistஇவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்து வந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மோசமாகி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பூவாச்சல் காதர் காலமாகியுள்ளார். அவரது மறைவு மலையாள திரையுலகில், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.