தமிழகம் சினிமா

திடீரென உயிரிழந்த தமிழ் சினிமாவின் இயக்குனர்! சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த சினிமாத்துறை!

Summary:

famous director died


பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது 79 வயது நிரம்பிய மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். 

 கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் மகேந்திரன் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார்.

  

 1978-ம் ஆண்டு வெளிவந்த "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குநர் மகேந்திரன். இதனையடுத்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற பிரபல தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன். 

இயக்குநர் மகேந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கும் மிகவும் பிடித்த இயக்குநர் என்ற பெயரை பெற்றவர். பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இயக்குநர் மகேந்திரன். இயக்குனர் மகேந்திரனின் மறைவிற்கு ஒட்டுமொத்த சினிமாத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement