சினிமா

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் சினிமா துறையினர்!

Summary:

famous comedy actor died

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தவர் நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் (66). இவர் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். உடுமலைப்பேட்டையில் பிறந்த நடிகர் ஜெயச்சந்திரன் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர். இவர் சூர்யா நடித்த ஆறு படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருப்பார். 

ஆறு படத்தில் நடிகர் வடிவேலு கழுத்தில் ரத்த காயத்துடன் வரும் ஜெயச்சந்திரனிடம் என்னய்யா கழுத்தெல்லாம் ரத்தம் என்று வடிவேலு அவரிடம்  கேட்கும்போது, "அட அசந்து தண்டவாளத்துல தூங்கிட்டேன் தம்பி... 4,5 ரயில் கழுத்துல ஏறிட்டுப் போயிடுச்சு..."என்றும் கூறும் காமெடி இன்றளவு அனைவரையும் சிரிக்க வைக்கும்.

இந்த நிலையில், நடிகர் ஜெயச்சந்திரன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்புக்குச் சென்று,  வீடு திரும்பிய அவர் மறுநாள் காலை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஜெயச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. 
 


Advertisement