பிக்பாஸ் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்!! பிரபல தொகுப்பாளினி போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!!
பிக்பாஸ் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்!! பிரபல தொகுப்பாளினி போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!!

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 தற்பொழுது மிகவும் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. அதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தமிழைப் போலவே தெலுங்கு தொலைக்காட்சியிலும் பிக்பாஸ் சீசன் 3 விரைவில் தொடங்க உள்ளது.மேலும் இதில் பிக்பாஸ் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அவரை தொடர்ந்து இரண்டாவது சீசனை நடிகர் நானி சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்பொழுது தொடங்கவிருக்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற பலரும் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கூறி பிக்பாஸ் குழுவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் கலந்துகொள்ளவதாக கூறியிருந்தேன்.
பின்னர் அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எனக்கு போன் செய்து உங்களை தேர்வு செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும் என தவறான நோக்கில் பேசினார். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என எனக்கு புரிந்தது. அதானி தொடர்ந்து நான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டேன் என கூறியுள்ளார்.