என் கையில பாருங்க.. எதோ எட்டிப்பார்க்குது.. ரஷ்மிகாவின் க்யூட் வீடியோ.!

என் கையில பாருங்க.. எதோ எட்டிப்பார்க்குது.. ரஷ்மிகாவின் க்யூட் வீடியோ.!


famous-actress-rashmika-mandanna-instagram-post

பிரபல இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிகளவு நடித்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் வருடம் வெளியான கன்னட திரைப்படமான கிரீக் பார்ட்டி படம் மூலமாக திரைத்துறையில் அறிமுகமாகி, தெலுங்கில் சாலோ திரைப்படம் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார். 

அதனைத்தொடர்ந்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் பெருமளவு வெற்றிப்படமாக அமைந்து, மாநிலம் விட்டு மாநிலத்திற்கும் அவரது வெற்றி கிடைக்க வழிவகை செய்தது. அதன்பின்னர் வெளியான தேவதாஸ் திரைப்படமும் வெற்றிநடைபோட்டது. 

actress

தமிழில் இவர் சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வணிகரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கீதா கோவிந்தத்தின் இங்கேம் காவாளே பாடல் வாழ்நாட்களில் மறக்க முடியாத வகையில் அமைந்துவிட்டது. 

குட் பை, மிசின் மஜ்னு போன்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் மிசின் மஜ்னு படம் விரைவில் வெளியாகவுள்ளது. குட்பை திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் டாப் டக்கர் என்ற பாடலையும் பாடியுள்ளார். 

actress

சிறந்த நடிகை, கன்னடத்தில் சிறந்த நடிகை, விருப்பமான நடிகை போன்ற ஜீ கன்னடா, சைமா விருதுகள் போன்றவற்றையும் பெற்றுள்ளார். தற்போது, பாரிஸ் நகரில் உள்ள நடிகர் ரஷ்மிகா மந்தனா, தனது கைகளில் ஆம்ஸ் எட்டிப்பார்ப்பதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.