பழம்பெரும் நடிகை மாரடைப்பால் காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!

பழம்பெரும் நடிகை மாரடைப்பால் காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!



famous actress diied cardiac arrest

பிரபல  பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்.

பிரபல இந்தி திரைப்பட நடிகையான சுரேகா சிக்ரி இந்தி நாடக தொடர்களின் மூத்த நடிகையாக  இருந்து வருகிறார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியல் திரைப்படமான " கிசா குர்சி கா " என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். மேலும், பல இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். 

1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்', மற்றும் 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ' என்ற திரைப்படங்களில் அவரது காதபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், 2008ம் ஆண்டில் 'பாலிகா வாது' என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருத்தியும் பெற்றார். 


இவர்  2018ம் ஆண்டு டிவி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் இருந்தபோது கீழே விழுந்தபோது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், மகனுடன் நடிகை சுரேகா சிக்ரி மும்பையில் வசித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.