சினிமா

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் பிரபல நடிகர் மாட்டுவண்டியில் செல்லும் நிலை!. வைரலாகும் புகைப்படம்!.

Summary:

famous actor going in Bullock cart


இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பல துறைகளில் கலக்கி வருகிறார் அமிதாப்பச்சன்.

சினிமா துறையில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் வாங்கி வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதேபோல நடிகர் அமிதாப்பச்சன் பல கோடி மதிப்புள்ள பல கார்களை வைத்துள்ளார்.

ஆனாலும் அவருக்கு மாட்டு வண்டியில் செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அந்த ஆசை தற்போது அவருக்கு நிறைவேறியுள்ளது. இதனை அவரது  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
 


Advertisement