பிரபல நடிகர் திடீர் மரணம்!! ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சோகத்தில் மூழ்கியது!!

பிரபல நடிகர் திடீர் மரணம்!! ஒட்டுமொத்த சினிமாத்துறையும் சோகத்தில் மூழ்கியது!!



famous-actor-died-VNRHQT


தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு. இவர்  ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். எம் ஜி ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடித்து வருகிறார். திருச்சியை சேர்ந்த இவர் 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

500 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். அதில் டைப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்ததால் கோபாலரத்தினம் என்ற இவரின் பெயரை டைபிஸ்ட் கோபு என மாறியது.

உயர்ந்த மனிதன், எங்க மாமா, காசேதான் கடவுளடா, பரீட்சைக்கும் நேரமாச்சு, மைக்கேல் மதன காமராஜன் என முக்கிய படங்களில் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். நாகேஷின் நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். 

typist gobu

82 வயதான இவர் ராயப்பேட்டையில் மனைவியுடன் வாடகை வீட்டில் கடைசி காலத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் புதன் கிழமை நேற்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று வியாழக்கிழமை அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

டைபிஸ்ட் கோபு மறைவிற்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.