அருமை.. நடிகர் யோகி பாபுவை பார்த்து செம கியூட்டாக கோவில் யானை செய்த காரியத்தை பார்த்தீங்களா! இணையத்தை கலக்கும் வீடியோ!!

அருமை.. நடிகர் யோகி பாபுவை பார்த்து செம கியூட்டாக கோவில் யானை செய்த காரியத்தை பார்த்தீங்களா! இணையத்தை கலக்கும் வீடியோ!!


Elephant salute to yogibabu video viral

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் யோகி பாபு. அவர் தற்போது டாப் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். அதுமட்டுமின்றி அவர் தனது திறமையால் ஏராளமான படங்களில்  ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

தற்போது ஹீரோவாக, காமெடி நடிகராக யோகிபாபு கைவசம் எக்கசக்கமான படங்கள் உள்ளது. இவரது மனைவி மஞ்சு பார்கவி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையாக இருக்கக்கூடியவர்.

அவர் அண்மையில் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ உப்பிலியப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு இருந்த கோவில் யானையைக் கண்டு யோகிபாபு சல்யூட் அடித்துள்ளார். உடனே அந்த யானையும் தனது தும்பிக்கையை தூக்கி கியூட்டாக சல்யூட் அடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.