எதிர்நீச்சல் சீரியல் நடிகை மருத்துவமனையில் அனுமதி.! ரசிகர்கள் சோகம்..

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மருத்துவமனையில் அனுமதி.! ரசிகர்கள் சோகம்..


Edhirneechal serial actress admitted in hospital

தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் "எதிர்நீச்சல்". பெண்கள் மட்டுமல்ல ஆண்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த சீரியல். அதற்கு காரணம் இதில் குணசேகரன் என்ற ஆணாதிக்க கேரக்டரில் நடித்திருக்கும் மாரிமுத்துவின் நடிப்பு தான். 

suntv

சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து மரணமடைந்ததால், தொடர்ந்து குணசேகரனாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது குணசேகரன் கடிதம் எழுதிவைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டது போல் காட்சி ஒளிபரப்பானது.

தொடர்ந்து அப்பத்தா, வீட்டில் உள்ள மருமகளிடம் "குணசேகரன் திரும்ப வருவான். ஆனா இப்போ வரப்போறவன் கொஞ்சம் ஆபத்தான ஆளு" என்று கூறுகிறார். எனவே குணசேகரனாக வேறு நடிகர் வரப்போகிறார் என்று தெரிகிறது.

suntv

இந்நிலையில், குணசேகரனுக்கு அடுத்தபடியாக அனைவராலும் ரசிக்கப்படும் கேரக்டர் நந்தினி. தற்போது நந்தினியாக நடித்து வரும் ஹரிப்ரியா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.