இரண்டே நாளில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படைத்த அசத்தலான சாதனை! படு குஷியில் ரசிகர்கள்!!

இரண்டே நாளில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படைத்த அசத்தலான சாதனை! படு குஷியில் ரசிகர்கள்!!


edarkum-thuninthavan-box-office-collection

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா பாண்டிராஜ்  இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடித்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தில் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, ராதிகா, சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் கடந்த மார்ச் 10ஆம் தேதி ரிலீசானது. மேலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

Edarkum thuninthavan

ஆனால் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதாவது படம் ரிலீஸாகி முதல் நாள் முடிவில் தமிழ்நாட்டில் 7 கோடி வரை  வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் முதல் நாள் கேரளாவில் மட்டும் ஒரு கோடி வசூல் பெற்றுள்ளது. பின்னர் 2வது நாள் முடிவில் தமிழகத்தில் 12 கோடி உட்பட உலகம் முழுவதும் 20 கோடி வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் படக்குழு உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.