சினிமா

பயங்கர கவர்ச்சிக்கு மாறிய எங்கவீட்டு மாப்பிளை சீதாலட்சுமி! புகைப்படம் இதோ!

Summary:

Eanga veettu maapilai sethaa lakshmi latest photos

நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்ப்பதாக கூறி எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியை நடத்தியது கலர்ஸ் தொலைக்காட்சி. 16 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசையுடன் விளையாடிவந்தார்.

16 பெண்களில் கடைசியாக வந்த மூன்று பெண்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என பார்வையாளர்கள் நம்பினார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி எந்த பெண்ணையும் ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை.

பின்னர் பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் போட்டியின் இறுதி வரை வந்த மூன்று பெண்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்த சீதா லட்சுமி. ஆர்யாவின் திருமணம் குறித்து பேசிய அவர், தனது திருமணம் குறித்து ஆர்யா எங்களிடம் எதுவும் கூறவில்லை, சமூக வலைத்தளங்களை பார்த்துதான் தெரிந்துகொண்டதாக சீதா லட்சுமி கூறியிருந்தார்.

இந்நிலையில் மாடலிங் துறையில் கலக்கிவரும் அவர் மிகவும் மாடர்னான உடை அணிந்து தனது சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement