சார்பட்டா பட நடிகை துஷாரா விஜயன் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.? வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..



Dushara vijayan glamour photos viral

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் துஷாரா விஜயன். இவர் தமிழில் முதன்முதலில் 'போதை ஏறி புத்தி மாறி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் துஷாராவின் நடிப்பு பாராட்டை பெற்றது.

Dusara

மேலும் இவர் இப்படத்திற்கு பின்பு அன்புள்ள கில்லி, கழுவேர்த்தி மூர்கன், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் டி 50 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, அபர்ணா பாலமுரளி, அனிகா சுரேந்திரன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இவரின் கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இப்படத்தின் மூலம் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Dusara

இது போன்ற நிலையில் சினிமாவில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் பிஸியான நடிகையாக இருந்து வருபவர் துஷாரா விஜயன். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். தற்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.