நீ சரியான ஆள் தான் ஒத்துக்குறேன் " சவால் விட்ட துல்கர் சல்மான்.. என்ன நடந்தது தெரியுமா.?

நீ சரியான ஆள் தான் ஒத்துக்குறேன் " சவால் விட்ட துல்கர் சல்மான்.. என்ன நடந்தது தெரியுமா.?


Dulquer salman viral instagram post

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருந்து தற்போது பான் இந்தியா நடிகராக வளர்ந்துள்ளவர்தான் துல்கர் சல்மான். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Dulquer

தமிழில் இவர் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து உள்ளார் துலகர் சல்மான்.

இது போன்ற நிலையில், சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து பிஸியாக இருந்து வரும் துல்கர் சல்மான் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dulquer

அந்த புகைப்படத்தில் ஒரு குழந்தை இவரை ஃபோட்டோ எடுத்ததாகவும் அந்த குழந்தையை " நீ சரியான ஆள் தான் ஒத்துக்கிறேன் " என்று குறிப்பிட்டு அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.