அடடே... படப்பிடிப்பில் திணறிய வெற்றிமாறன்.!! 5 நிமிடத்தில் சரி செய்து அசத்திய மனைவி ஆர்த்தி.!!director-vetrimaaran-wife-bails-him-out-of-trouble-in-s

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது இரண்டாவது படமான ஆடுகளம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்று முன்னணி இயக்குனராக தன்னை நிலை நிறுத்தினார். இவரது இயக்கத்தில் வெளியான விசாரணை, வடசென்னை, அசுரன் மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் அவரது பேட்டியின் மூலம் வெளியாகி இருக்கிறது .

வெற்றிமாறனின் திருமண வாழ்க்கை

இயக்குனர் வெற்றிமாறன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஐடி துறையில் பணியாற்றும் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பூந்தென்றல் என்ற மகளும் கதிரவன் என்ற மகனும் உள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனின் வாழ்க்கையில் அவரது முதல் செல்போன் முதல் பைக் என அனைத்தையும் அவரது மனைவி ஆர்த்தியே வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதனை வெற்றி மாறனும் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

tamil cinema

தேசிய நெடுஞ்சாலை திரைப்படம்

வெற்றிமாறன், பொல்லாதவன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தை இயக்கத் தொடங்கி இருக்கிறார். அந்தப் படம் சில காரணங்களால் முடி வடையாமல் பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கிறது. அந்தப் படத்திலும் தனுஷ் தான் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது வெற்றிமாறனுக்கு அவரது மனைவி ஆர்த்தி உதவிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: அரங்கம் அதிர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேச்சு..! முழு விபரம் உள்ளே.! என்ன சொன்னார் தெரியுமா?.!

படப்பிடிப்பில் உதவிய மனைவி ஆர்த்தி

தேசிய நெடுஞ்சாலை திரைப்படத்தில் 20 கம்ப்யூட்டர்களை கொண்ட ஐடி அலுவலகத்தில் தனுஷ் இருப்பது போன்ற காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். பல இடங்களில் இந்த காட்சியை படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கேட்டபோது 1 லட்ச ரூபாய் வாடகை கேட்டு இருக்கிறார்கள். படமும் குறைவான பட்ஜெட்டில் தயாரானதால் இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் அறையில் உட்கார்ந்து இருந்த வெற்றிமாறன் தனது மனைவி பணியாற்றும் ஐடி கம்பெனியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருக்கிறார். அவரது மனைவி ஆர்த்தியும் தனது நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி 5 நிமிடத்தில் வெற்றிமாறனுக்கு படப்பிடிப்பு நடத்த உதவி இருக்கிறார். இந்த சம்பவத்தை வெற்றிமாறன் சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: Good Bad Ugly: குட் பேட் அக்லீ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியீடு.!