இணையத்தில் வைரலாகும் இயக்குனர் வெங்கட்பிரபு மகள் புகைப்படம்!

இணையத்தில் வைரலாகும் இயக்குனர் வெங்கட்பிரபு மகள் புகைப்படம்!


Director venkat prabhu daughter photo

சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அவரது முதல்படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வெற்றி இயக்குனர்களின் வரிசையில் வெங்கட் பிரபுவும் சேர்ந்துவிட்டார். அதை தொடர்ந்து அவர் இயக்கிய கோவா திரைப்படமும் வெற்றிபெற்றது.

அதன் பிறகு மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற மிகப்பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Director venkat prabhu

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஷிவானி என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடினர்.

தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ புகைப்படம் பாருங்கள்.