பெரும் பூதமாக வெடித்த லாஸ்லியா- கவின் காதல் விவகாரம்.! கடுப்பாகி கழுவி ஊற்றிய பிரபல இயக்குனர்!! யாரை தெரியுமா?

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மேட்டுமே உள்ளனர் .
மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பெரும் சர்ச்சையை கிளப்பி வருவது கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம். இவர்களின் காதலுக்கு பலர் ஆதரவு கொடுத்தாலும் சிலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த லாஸ்லியாவின் தந்தையும் கடுமையாக விளாசினார். இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு ஆதரவாக பிரபல இயக்குனர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.