
Director seran nominate losliyaa in bigg boss house
பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிவருகிறார். சீசன் ஓன்று மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான சீசன் மூன்று ஆரம்பம் முதலே ரசிகர்களின் ஆதரவை பெற்று வைரலாகிவருகிறது. மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களின் பிரபல தமிழ் இயக்குனர் சேரனும் ஒருவர். அதேபோல் இலங்கையை சேர்ந்த இளம் பெண் லஸ்லியா இளைஞர்களின் ஆதரவை பெற்று பிரபலமாகிவருகிறது.
இந்நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரை வெளியேற்றுவது என்பதற்கான எலிமினேஷன் ஆரம்பமாகியுள்ளது. இதில் இயக்குனர் சேரன் இளைஞர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள லஷ்லியாவை எலிமட் செய்ய நாமினேட் செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் லஷ்லியாவை தனது மகள் என்றும், சேரன் பார்ப்பதற்கு எனது அப்பா போல் உள்ளார் என்றும் கூறி, இருவரும் மிகவும் பாசமாக இருந்துவந்த நிலையில் இன்று லஷ்லியாவை வெளியே அனுப்ப சேரன் நாமினேட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo2 #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/tOLKO5T8aM
— Vijay Television (@vijaytelevision) July 1, 2019
Advertisement
Advertisement