#Breaking: படப்பிடிப்பில் விபத்து..! காயமடைந்த பிரபல இயக்குனர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.. சோகத்தில் ரசிகர்கள்.!!

ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் காயமடைந்தார்.
ஹிந்தியில் கோல்மால், சிங்கம், ஜாமீன், சிங்கம் ரிட்டன்ஸ், சிம்பா, சூர்யவன்ஷி, போல் பச்சான், சென்னை எக்ஸ்பிரஸ், 3 இடியட்ஸ், திவாளே உட்பட பல படத்தை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி.
இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. தற்போது இயக்கும் இந்திய போலீஸ் படையின் வெப்ஸீரில் படப்பிடிப்பு ஹைதராபாத் புறநகர் பகுதியான ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் நடந்து வருகிறது.
இப்படத்தில் கார் சேஸிங் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக கார் சேஸின் காட்சியை படமாக்கும் போது, ரோஹித் ஷெட்டி விபத்தில் படுகாயம் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு எல்.பி நகரில் உள்ள காமிலேனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.