#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
இதை பார்த்துதான் நடிகைகள் தேர்வு செய்ய படுகிறார்கள்! இயக்குனர் ரஞ்சித் கூறிய அதிர்ச்சி தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது. படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிக்கவும் செய்கிறார். இவர் தயாரித்த பரியேறும் பெருமாள் மாபெரும் வெற்றிபெற்றது.
மேலும் சினிமாவை குறித்தும் அரசியலை குறித்தும் அவ்வப்போது கருது கூறி வருகிறார் ரஞ்சித். இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், தமிழ்சினிமாவில் கதாநாயகிகளை, போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று கூறினார்.
மேலும் ஒரு திரைப்படத்திற்கு நடிகைகளை தேர்வு செய்யும் போது, அவர் நல்ல நடிகையா, சிறப்பாக நடிப்பாரா என அவருடைய திறமையை பார்த்து தேர்வு செய்யாமல், உடல் அமைப்பு மற்றும் அழகு இருக்கிறதா? என பார்த்து தேர்வு செய்கின்றனர் எனவும் கூறினார். இவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.