கேவலமா நடந்துக்குறாங்க.! அவங்களையெல்லாம்.. செம கடுப்பாகி பிரபல இயக்குனர் கூறியதை பார்த்தீங்களா!!

கேவலமா நடந்துக்குறாங்க.! அவங்களையெல்லாம்.. செம கடுப்பாகி பிரபல இயக்குனர் கூறியதை பார்த்தீங்களா!!



director-perarasu-talk-about-tiktok-and-reels

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'. இந்த படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்ற படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி பேசுகிறது. ஆனால் இங்கு சிலருடைய செயல்களை பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் ஏற்படுகிறது என்றே தோணுகிறது.

டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில பெண்கள் கேவலமாக நடந்து கொள்ளும் விதமும், பேசிய பேச்சும் சகிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக இரு பெண்கள் செய்யும் வேலைகள் மிகவும் மோசமானவை. அவர்களையெல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும்.

நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணம் செல்போன்கள்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப்  தவிர்க்க வேண்டும். அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது. இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.