"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
"அரசியல்களத்தில் ஆண்களுக்கு நிகர்.. ஜெயலலிதாவுக்கு அடுத்தது இவர்தான்": குஷ்பூவை புகழ்ந்துதள்ளிய பிரபல இயக்குனர்..!!
தமிழில் திருப்பாச்சி, திருப்பதி, திருத்தணி, சிவகாசி போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இயக்குனர் பேரரசு. இவர் நடித்த பல படங்களும் ஊர் பெயரைச் சார்ந்தே இருக்கும். இதற்கான விளக்கத்தையும் சமீபத்தில் ஒரு பேட்டியில் அளித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேரரசு, "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரிசையில் தற்போது குஷ்பு மட்டுமே இருப்பதாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
மேலும் அரசியலுக்கு வரும் பெண்கள் மனதிடத்தில் ஆண்களுக்கு நிகராக இருக்கவேண்டும் என்று கூறி, மனதிடத்துடன் அரசியல் களத்தில் இருக்கும் குஷ்புவை மனதார பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.