என் நண்பரை இழந்துட்டேன்..பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு! உருக்கமாக நடிகர் கிருஷ்ணா வெளியிட்ட பதிவு!

யாக்கை பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பிரபல நடிகராக கிருஷ்ணா


director-muthukumaran-dead-by-corono

யாக்கை பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பிரபல நடிகராக கிருஷ்ணா மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

 கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான திரைப்படம் யாக்கை. இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை குழந்தை வேலப்பன் இயக்கியுள்ளார். மேலும் பிரைம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துக்குமரன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமரன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் , ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

corono

இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமாக எனது நெருங்கிய நண்பரையும், என் படத்தின் தயாரிப்பாளரையும் இழந்துவிட்டேன். அவர் எனக்கு குடும்பம். நான் சந்தித்த மிக நல்ல மனிதர். எதையும், யாரிடமும் இல்லை என சொல்லமாட்டார். எப்போதும் மக்களை மகிழ்ச்சியாகப் பார்க்க விரும்பினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.