அயலி நாயகியின் அடுத்த படத்தின் ஆடியோ லான்ச்... இணையதளத்தில் ட்ரெண்டிங்கான க்யூட் வீடியோ.!
நடிகர் சூர்யாவின் குடும்பத்தை அவமானபடுத்திய பகாசூரன் இயக்குநர் மோகன்.ஜி.? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்.!
நடிகர் சூர்யாவின் குடும்பத்தை அவமானபடுத்திய பகாசூரன் இயக்குநர் மோகன்.ஜி.? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்.!

கோலிவுட் திரையுலகில் இயக்குநர் மோகன்.ஜி தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய ஜாதியரீதியிலான திரைப்படங்களை இயக்குகிறார். மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து மோகன்.ஜி இயக்கத்தில், செல்வராகவன், ராதாரவி, நட்டி, தாரக்ஷி கே.ராஜன் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பகாசூரன். தொழில்நுட்பங்கள், மொபைல்கள் போன்றவைகளால் இந்த கால பெண்களுக்கு ஏற்படுத்தக்கூடிய கெடுதல்கள் ஆகியவற்றைக் கதையின் மையமாக வைத்து இப்படத்தை இயக்குகிறார்.
பகாசூரன் படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடித்திருக்கிறார். இப்படத்தில் செல்வராகவன் கொலைகள் செய்வது போலவும், மற்றொரு பக்கம் இளம்பெண்கள் தற்கொலை செய்வது போலவும் காட்சியமைத்த இயக்குநர். எதற்காக பெண்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை திரைப்படமாக மோகன்.ஜி ஸ்டைலில் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், பகாசூரன் படத்தில் ஒரு காட்சியில் காலண்டரில் சிவகுமார்&கோ. இதனை ரசிகர் ஒருவர் குறிப்பிட்டு சூர்யாவை பழிவாங்கிய மோகன்.ஜி என்று சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படத்தின் காலண்டரில் அக்னி சட்டி இருக்கும் இது பாமக கட்சியினரை அவமானபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டது என்ற சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.