இயக்குநர் மாரி செல்வராஜ் தற்கொலை முயற்சி..! அதிர்ச்சி தகவல்!!
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் மாரிசெல்வராஜ். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியாகி அனைவரிடத்தும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தில் உதயநிதி அவரது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த படம் அரசியல் தலைவர்களால் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும், இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை சுமார் 60 கோடி வரை வசூலை அள்ளி சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட பட்டது. அதில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

அதில், தனக்கு அவ்வப்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றும் என்று தெரிவித்திருந்தார். ஒருமுறை தற்கொலை செய்யவதற்கு முயற்சியும் செத்துள்ளேன். அப்போது வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டு, அந்த முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.