பிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு... மருத்தவமனையில் அனுமதி...director-manirathnam-affected-by-corona

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்களை விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனினும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.

manirathnam

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் என அரசியல் தலைவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்னணி இயக்குனரான மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அறிகுறியுடன் நள்ளிரவு கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த மணிரத்னத்தை மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து அவர் மருத்துவர் பரிந்துரைப்படி கண்காணிப்பில் இருந்து வருகிறார்.