"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
சினிமா துறையில் தொடரும் மர்மங்கள்! பிரபல தமிழ் இயக்குனர் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி!
![Director manirathinam admitted in hospital due to health illness](https://cdn.tamilspark.com/large/large_04-female-directors-why-1.w1200.h630-9916.jpg)
ரோஜா, நாயகன், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய், ஆயத எழுத்து, குரு, ராவணன், ஓ.கே.கண்மனி, காற்றுவெளியிடை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் மணிரத்தினம். இவர் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவை இந்திய திரையுலகிற்கு மட்டும்மில்லாமல் உலக அளவில் தமிழ் சினிமாவை கொண்டுசென்றவர் இவர்.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் இன்று (வியாழக்கிழமை) திடீர் மாரடைப்பால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டுமுறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் ஆயுதஎழுத்து படத்தை இயக்கிய போதே மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும். மேலும் காற்றுவெளியிடை படத்தின் போது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தன் திரையுலக பயணத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒருமுறையாவது இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவை ஏற்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.
இவரது மனைவி முன்னாள் கதாநாயகியும், தற்போதைய குணசித்திர நடிகையுமான சுஹாசினி ஹாசன் ஆவார்.
இவர் தற்போது சிம்புவை வைத்து செக்க சிவந்த வானம் என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.