சினிமா

மாஸ்டர் பட பிரபலத்துக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

மாநகரம் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்

மாநகரம் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய கொரோனா வைரஸ்க்கு சாமானியர்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதைத் தொடர்ந்து அவர் கார்த்தியின் நடிப்பில் கைதி மற்றும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, வசூல் சாதனை படைத்த மாஸ்டர் படங்களை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் பலத்துடன் திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement